ஆப்நகரம்

சட்ட விரோதமாக குடியேறியதாக ராணுவ அதிகாரி மீது வழக்கு.!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ராணுவ அதிகாரியின் மீது , சட்டவிரோதமாக குடியேறியவர் என்று அசாம் அரசு வழக்கு பதிவுசெய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Oct 2017, 2:15 pm
அசாம் மாநிலத்தை சேர்ந்த ராணுவ அதிகாரியின் மீது , சட்டவிரோதமாக குடியேறியவர் என்று அசாம் அரசு வழக்கு பதிவுசெய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil retired army man was a immigrant assam police
சட்ட விரோதமாக குடியேறியதாக ராணுவ அதிகாரி மீது வழக்கு.!


அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள ஷாயாகானில் வசிப்பவர் முகத் அஸ்மல் ஹக். இந்திய ராணுவ அதிகாரியான இவர் ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரை சட்டவிரோதமாக குடியேறியவர் என அசாம் மாநில போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயம் இந்த வழக்கு குறித்து 3-ம் தேதி விசாரிக்கிறது.

இதுகுறித்து முகத் அஸ்மல் ஹக் கூறுகையில், இந்த நிகழ்வால் மிகவும் வருத்தம் அடைந்து உள்ளதாகவும், மிகவும் அதிகமாக அழுதுவிட்டதாகவும், என்னுடைய ஆன்மா உடைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். 30 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் இதுபோன்ற அவமதிப்பை எதிர்க்கொண்டுள்ளதாக கூறிய அவர் “நான் வங்காளதேசத்தில் இருந்து வந்த சட்டவிரோத குடியேறி என்றால் இந்திய ராணுவத்தில் எப்படி நான் பணியாற்றியிருக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒருவர் ராணுவத்தில் சேரும்போது போலீஸ் ஆய்வு செய்வது என்பது கட்டாயமானது. என்னுடைய வழக்கிலும் போலீஸ் பரிசோதனை என்பது நடந்தது என்று கூறிய, முகத் அஸ்மல் ஹக், இது போன்ற குற்றச்சாட்டு என் மீதும், எனது மனைவி மீதும் கடந்த 2012ல் சுமத்தப்பட்டது. அந்த நேரத்தில் அனைத்து ஆவணங்களையும் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தோம். அப்போது நாங்கள் முறையான இந்திய குடிமகன்கள் தான் என அறிவிக்கப்பட்டது என்று , முகத் அஸ்மல் ஹக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மீது , சட்டவிரோதமாக குடியேறியவர் என்று அசாம் அரசு வழக்கு பதிவுசெய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Retired army man was a immigrant - assam police

அடுத்த செய்தி