ஆப்நகரம்

வாழ்நாள் முழுதும் சேமித்த தொகையை ராணுவத்திற்கு அளித்த வங்கி ஊழியர்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர் இந்திய ராணுவத்திற்கு ரூ.1 கோடி பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

TNN 8 May 2017, 3:11 pm
டெல்லி: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர் இந்திய ராணுவத்திற்கு ரூ.1 கோடி பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.
Samayam Tamil retired bank employee 84 donates rs 1 crore life savings to national defence fund
வாழ்நாள் முழுதும் சேமித்த தொகையை ராணுவத்திற்கு அளித்த வங்கி ஊழியர்


குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் வசிக்கிறார் ஜனார்தன் பட். 84 வயதான இவர் பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். சமூக சேவைகள் செய்வதில் ஈடுபாடு கொண்ட ஜனார்த்தன், வங்கியில் பணியாற்றிய போது தொழிற்சங்க தலைவர் பொறுப்பில் இருந்தபோது தொழிலாளர்களின் முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளார்.

ஓய்வுக்குப் பின் தனக்குக் கிடைத்த ஓய்வூதியத் தொகையை பல்வேறு வகைகளில் விதமாக முதலீடு செய்து ஒரு கோடி ரூபாய் திரட்டியுள்ளார். அந்தத் தொகையை ராணவ வீரர்களின் நலனுக்காக செலவளிக்க நினைத்த அவர், ஒரு கோடி ரூபாயையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

அடுத்த செய்தி