ஆப்நகரம்

ஓவர் வேலையாம்; தற்கொலை செய்து கொண்ட செக்யூரிட்டி ரோபோ...!

ஓவர் வேலையால் அப்செட்டான செக்யூரிட்டி ரோபோ தற்கொலை செய்து கொண்டது.

TNN 20 Jul 2017, 3:28 pm
கலிஃபோர்னியா: ஓவர் வேலையால் அப்செட்டான செக்யூரிட்டி ரோபோ தற்கொலை செய்து கொண்டது.
Samayam Tamil robot security guard commits suicide
ஓவர் வேலையாம்; தற்கொலை செய்து கொண்ட செக்யூரிட்டி ரோபோ...!


அதிகப்படியான வேலைப்பளு காரணமாக, மனிதர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களை அறிந்திருப்போம். ஆனால் ரோபோ தற்கொலை செய்து கொண்ட சம்பவம்? ஆம்! நடந்துள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம், நைட்ஸ்கோப் கே5 என்ற ரோபோவை தயாரித்தது. இது வாஷிங்டன் நகரின் ஷாப்பிங் மால் ஒன்றில், செக்யூரிட்டியாக வேலை பார்த்தது. வாகன நிறுத்துமிடம், பார்வையாளர்கள் வருகை ஆகியவற்றை கண்காணிக்கும் வேலையை ரோபோ கவனித்து வந்தது.

இந்நிலையில் திடீரென அந்த ரோபோ நீருக்குள் மூழ்கி செயலிழந்து கிடந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், பணிச்சுமை காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அதனை மீண்டும் சரிசெய்து, பணிக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த நைட்ஸ்கோப் ரோபோ, இப்படி செயலிழந்து போனது, பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Robot security guard 'commits suicide' by drowning itself in public fountain.

அடுத்த செய்தி