ஆப்நகரம்

300 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியளிக்கும் ரோட்டரி கிளப்!

தமிழ்நாட்டில் உள்ள 300 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு, ரோட்டரி கிளப் நிதியளிக்க உள்ளது.

TNN 7 Nov 2017, 4:28 pm
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ள 300 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு, ரோட்டரி கிளப் நிதியளிக்க உள்ளது.
Samayam Tamil rotary club to fund heart surgeries of 300 tn children
300 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதியளிக்கும் ரோட்டரி கிளப்!


ஆண்டுதோறும் இருதய கோளாறு காரணமாக பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். அவர்களின் மருத்துவ செலவிற்கு தேவையான பணம் இல்லாமல் அவர்களின் பெற்றோர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்தியாவில் மட்டும் 1000 குழந்தைகளில் 6 இலிருந்து 8 குழந்தைகள் பிறவிலேயே இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை பிறவிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் குணமடைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் சவுத் மெட்ராஸ் மற்றும் கலிபோர்னியா பேசதீனா ரோட்டரி கிளப் இரண்டும் இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள 300 ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை செய்ய நிதி திரட்டி உள்ளனர். இதற்காக ஃபோர்டு மோட்டார் நிறுவனமும் நிதியளித்துள்ளது.

Rotary Club to fund heart surgeries of 300 TN children

அடுத்த செய்தி