ஆப்நகரம்

கோவில் ஏலத்தில் ரூ. 39000 பெற்ற புனித எலுமிச்சை

திருவெண்ணெய்நல்லூர் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவின் ஒரு பகுதியாக, கோவில் நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்ட புனித எலுமிச்சைரூ. 39,000 பெற்றுள்ளது

TNN 27 Mar 2016, 11:02 am
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவின் ஒரு பகுதியாக, கோவில் நிர்வாகத்தால் ஏலம் விடப்பட்ட புனித எலுமிச்சை ரூ. 39,000 பெற்றுள்ளது.
Samayam Tamil sacred lemon fetches rs 39k in temple bid
கோவில் ஏலத்தில் ரூ. 39000 பெற்ற புனித எலுமிச்சை


திருவெண்ணெய்நல்லூர் அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவிலில் நடந்த 11 நாள் பங்குனி உத்திரம் திருவிழாவின் கடைசி நாளில் இறைவனுக்கு படைக்கப்பட்ட புனித எலுமிச்சையை ஏலம் விடுவது வாடிக்கையாகும். இந்த புனித எலுமிச்சை தங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என்றும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்றும் இக்கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்தாண்டு இந்த புனித எலுமிச்சையை ஜெயராமன் மற்றும் அமராவதி தம்பதியர் ஏலம் எடுத்துள்ளனர். புனித எலுமிச்சையோடு மற்ற எலுமிச்சைகள் அனைத்தும் ரூ. 57,722 பெற்றுள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள முதியவர் கனகசபேசன் கூறுகையில், "இந்த கோவில் எப்போது நிறுவப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. இரண்டு குன்றுகள் சந்திக்கும் இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. சில காலம் கழித்து, இந்த கோவில் பிரசித்தி அடைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி