ஆப்நகரம்

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பாஜக முதல்வருக்கு உதவிய முஸ்லிம் நபர்!

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 5 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியபோது இர்பான் ஷேக் என்ற முஸ்லிம் தான் முதலில் உதவியுள்ளார்.

TOI Contributor 27 May 2017, 1:10 pm
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 5 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியபோது இர்பான் ஷேக் என்ற முஸ்லிம் தான் முதலில் உதவியுள்ளார்.
Samayam Tamil scrap shopper irfan shaikh saved cm devendra fadnavis after helicopter crash
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பாஜக முதல்வருக்கு உதவிய முஸ்லிம் நபர்!

நேற்று முன் தினம், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர் 80 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் அருகே பழைய இரும்பு கடை வியாபாரம் செய்யும் 25 வயது இர்பான் ஷேக் என்பவர் தான் முதலில் ஹெலிகாப்டர் அருகே சென்றுள்ளார்.

அங்கு கூடியிருந்த பலரும் விபத்து ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வெடிக்கும் என நினைத்து அதனருகில் யாரும் செல்ல தயக்கம் காட்டினர். இந்நிலையில் அதனருகில் சென்ற இர்பான் ஷேக், உள்ளே நமது மன்னர் சிக்கியுள்ளார் என சத்தம் போட்டுள்ளார். கதவு முற்றிலும் உருக்குலைந்து போய் இருந்ததால் வெளியிலிருந்து திறக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் அது திறக்க முடியவில்லை. பின்னர் உள்ளிருந்து முதல்வர் கதவை தள்ளிய பின் திறந்துள்ளது.

அதன் பின்னர் முதல்வருக்கு கை கொடுத்து காப்பாற்றினேன் என இர்பான் ஷேக் உள்ளூர் மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி