ஆப்நகரம்

Shashi Tharoor: கெமிஸ்டிரி டீச்சரின் திருமண அழைப்பிதழுக்கு சசிதரூர் காமெடி டுவீட்

கெமிஸ்டிரி டீச்சரின் வித்தியசமான திருமண அழைப்பிதழுக்கு காங்., எம்.பி சசிதரூர் செய்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 14 Dec 2018, 10:46 am
"கெமிஸ்டிரி டீச்சரின் திருமண அழைப்பிதழ்" என்ற பெயரில் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வித்தியசமான திருமண அழைப்பிதழ் ஒன்று பரவி வருகிறது.
Samayam Tamil chemistry techer


இந்த அழைப்பிதழில் உள்ள தம்பதிகளின் பெயர்கள் வேதியல் பெயரை போல குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழ் வாசகமும் வேதியல் பாடங்களில் உள்ள வாசகங்களை போல அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த அழைப்பிதழில் திருமணம் இன்று(டிச.14ம் தேதி) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடப்பதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை காங்., கட்சியை சேர்ந்த கார்த்திக் என்ற பிரமுகர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்., எம்.பி சசிதரூரை டேக் செய்து அவரது தொகுதியில் இந்த கெமிஸ்டிரி டீச்சரின் திருமணம் நடப்பதாக குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

இதை ரீடுவீட் செய்த சசிதரூர் அதில் இந்த தம்பதிகளின் இடையே கெமிஸ்டிரி ஸ்பார்க்கிள் ஆகட்டும், பிசிக்ஸ் வெளிச்சத்தையும் இதமான அனுபவத்தையும் ஏற்படுத்தட்டும், பயாலஜி அழகான குழந்தையை தரட்டும் என வாழ்த்தி இருக்கிறார்.
அறிவியல் பெயர்களை கொண்டு வித்தியாசமாக உருவாக்கப்பட்ட அழைப்பிதழுக்கு அறிவியல் ரீதியாகவே சசிதரூர் வாழ்த்து அனுப்பியிருப்பது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி