ஆப்நகரம்

ஸ்மார்ட் போன்களால் தற்கொலை அதிகரித்துள்ளது:அமெரிக்க ஆய்வு

அமெரிக்க பல்கலைகழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் , ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் 60 சதவீத பேர் தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது.

TNN 6 Dec 2017, 6:08 pm
அமெரிக்க பல்கலைகழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் , ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் 60 சதவீத பேர் தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளது.
Samayam Tamil smart phone increases suicide rate american research result
ஸ்மார்ட் போன்களால் தற்கொலை அதிகரித்துள்ளது:அமெரிக்க ஆய்வு


15 முதல் 16 வயதுடைய 19 இளைஞர்களிடத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 12 இளைஞர்களிடம் இணையத்துக்கு அடிமையான காரணத்தால் அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை, தூங்கும்நேரம், செயல்திறன், சுற்றி இருப்பவர்களிடம் பழகும் தன்மை போன்றவற்றில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன போன்றவை தொடர்பாகவும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்பொழுது மூளையில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துகொள்வதற்காக Magnetic Resonance Spectroscopy என்ற கருவி இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கருவி மூலம் மூளையில் நடக்கும் வேறுபாடுகளை கண்டறிய முடியும் . இவ்வாறு கண்டறிந்தபோது , மனிதர்களின் மூளையை அடிமையாக்கி, அதன் பக்கவிளைவாக உடல் சோர்வு , மனச்சோர்வை ஸ்மார்ட் போன்கள் ஏற்படுத்துகிறது.
மேலும் இதனை பயன்படுத்துவதால் தற்கொலை அதிகமாகியுள்ளது என்பதை இந்த ஆராய்ச்சி குழு உறுதிபட தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி