ஆப்நகரம்

கழிவு மேலாண்மைக்கு சூப்பர் ஐடியா! ரூ.20 லட்சம் பரிசு!

தெலுங்கானாவைச் சேர்ந்த நிறுவனம் தனியார் நிறுவனம் ஒன்று கழிவு மேலாண்மைக்கான புதிய திட்டத்தை வகுத்ததற்காக ரூ.20 லட்சம் பரிசு பெற்றுள்ளது.

TNN 23 Jun 2017, 6:02 am
தெலுங்கானாவைச் சேர்ந்த நிறுவனம் தனியார் நிறுவனம் ஒன்று கழிவு மேலாண்மைக்கான புதிய திட்டத்தை வகுத்ததற்காக ரூ.20 லட்சம் பரிசு பெற்றுள்ளது.
Samayam Tamil smart waste management solution wins 20 lakh
கழிவு மேலாண்மைக்கு சூப்பர் ஐடியா! ரூ.20 லட்சம் பரிசு!


தெலுங்கானா மாநிலத்தில் டி-ஹப் (T-Hub) என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கழிவு மேலாண்மைக்கான தொழில்நுட்பப் போட்டியில் 2700 நிறுவனங்களும் தன்னார்வலர்களும் பங்கேற்றனர். இப்போட்டியின் முதல் கட்டத்தில் 800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பத்து பேர் இறுதிக்கட்ட போட்டியில் வெற்றியாளர்களாக தேர்வுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பரிசுகளை வழங்கும் விழா வியாழக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ராஜ் மதன்கோபால் என்பவரின் நிறுவனமான Banyan Sustainable Waste Management Pvt. Ltd. சிறந்த கழிவு மேலாண்மை திட்டத்தை வடிவமைத்ததற்காக ரூ.20 லட்சம் பரிசு பெற்றது.

பயோமெட்ரிக் கருவிகள், ஜிபிஎஸ் மற்றும் சென்சார்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் 15 பொறியில் கல்லூரி மாணவர்களும் அந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தை தெலுங்கானா மாநில அரசிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அரசு ஒப்பந்தத்துடன் பல இடங்களில் தங்கள் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் ராஜ் மதன்கோபால் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி