ஆப்நகரம்

மருத்துவமனையில் அம்மாவை சேர்த்துவிட்டு ’எஸ்கேப்’ ஆன மகன்..!

மருத்துவமனையில் தனது அம்மாவை சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு காணாமல் போன மகனை மருத்துவனை நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.

TNN 25 May 2017, 4:50 pm
மருத்துவமனையில் தனது அம்மாவை சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு காணாமல் போன மகனை மருத்துவனை நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.
Samayam Tamil son abandons mother in hospital as bill nears rs 1 5 lakh
மருத்துவமனையில் அம்மாவை சேர்த்துவிட்டு ’எஸ்கேப்’ ஆன மகன்..!


கடந்த மாதம் குர்கானில் உள்ள எஸ்.ஆர்.வி மருத்துவமனைக்கு, தனது அம்மா மயக்கமடைந்து விட்டதாகவும், எனவே உடனடியாக ஆம்புலன்சை அனுப்புமாறும் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த தொலைபேசி அழைப்பு கொடுத்த முகவரிக்கு, ஒரு செவிலியருடன் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த குறிப்பிட்ட முகவரிக்கு சென்ற ஆம்புலன்ஸ், மயக்கமடைந்த நிலையில் இருந்த கபூர் என்ற பெண்மணியை சிகிச்சைக்காக அழைத்து வந்தது. உடன் அவருடைய மகனும் வந்திருந்தார். சிகிச்சைக்காக கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்ற அவரது மகன், திரும்ப வரவே இல்லை.

கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்ற கபூர், தற்போது நலமாக உள்ளார். அவருக்கு சிகிச்சை கட்டணமாக 1.5 லட்சம் வந்துள்ளது. ஆனால் இந்த கட்டணத்தை செலுத்தி, கபூரை அழைத்துச் செல்ல கடைசி வரை அவருடைய மகன் வரவே இல்லை.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், காவல்துறையினரிடம் புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து கபூர் வசித்து வந்த முகவரிக்கு காவல்துறை சென்று விசாரித்த போது, ஆம்புலன்சில் கபூர் சென்ற சில மணி நேரத்திலேயே அவரது மகன் அந்த வீட்டை காலி செய்துவிட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு மும்பை அந்தேரியில் நான்கு பங்களா இருப்பதாகக் கூறி, இந்த வீட்டை அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்திருந்ததும் தெரியவந்தது. பொதுவாக முதியவர்களை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை என்ற பெயரில் அனாதையாக விட்டுச் செல்வது சகஜமாக ஒன்று. ஆனால் தனியார் மருத்துவமனையில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Son ‘abandons’ mother in hospital as bill nears Rs 1.5 lakh

அடுத்த செய்தி