ஆப்நகரம்

குடைக்குள் கல்வி கற்கும் மாணவர்கள்; 100% தேர்ச்சியளித்த அரசுப் பள்ளியின் அவலநிலை!

100% தேர்ச்சியை அளிக்கும், இந்த அரசுப் பள்ளியில் மாணவர்கள் குடைக்குள் கல்வி கற்கும் சோகம் நிலவுகிறது.

Samayam Tamil 16 Jul 2018, 3:50 pm
அரகல்குட்: 100% தேர்ச்சியை அளிக்கும், இந்த அரசுப் பள்ளியில் மாணவர்கள் குடைக்குள் கல்வி கற்கும் சோகம் நிலவுகிறது.
Samayam Tamil Govt School


கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டம் மல்லிபட்டன ஹோப்லியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 8 அறைகள் இருக்கின்றன. அவற்றில் 2 அலுவலகப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3 வகுப்பறைகள் மழைக் காலங்களில் பயன்படுத்த முடியாத அளவு, மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதன் மேற்கூரைகளில் இருக்கும் துளைகளால் மழை நீர் உள்ளே ஒழுகும் நிலை ஏற்படுகிறது.

மேலும் 3 அறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் மழை பெய்யும் போது, மாணவர்கள் குடை பிடித்த படி, அதில் கல்வி கற்கின்றனர். ஏனெனில் மழை நீரால் மாணவர்களும், பாடப் புத்தகங்களும் நனையாமல் இருக்க தற்காத்துக் கொள்கின்றனர். இந்தப் பள்ளிக்கு 50 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது. இந்த வகுப்பறையின் கூரைகள் மட்டுமல்ல, சுவர்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

இங்கு பயிலும் 168 பேரில் 87 மாணவர்கள், 81 மாணவிகள் அடங்குவர். கடந்த 3 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சியில் 100% தேர்ச்சியை இப்பள்ளி அளித்துள்ளது. இந்த அரசுப் பள்ளி அருகிலுள்ள மொரார்ஜி உண்டு உறைவிட பள்ளிக்கு, தரமான கல்வியில் போட்டியாக விளங்குகிறது. அரசுப் பள்ளி 5.15 ஏக்கர் நிலத்தில் சுற்றுச் சுவரின்றி அமைந்துள்ளது.

முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோரின் சொந்த மாவட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பள்ளியை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய பள்ளி தலைமையாசிரியர் ஷிவபிரகாஷ், பள்ளியைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

கடந்த ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் ரேவண்ணா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தார். அதைக் கொண்டு 2 வகுப்பறைகளின் கூரையை சீரமைத்தோம். வகுப்பறைகளின் கூரை விழுந்து விடுமோ, மாணவர்கள் அச்சத்திலேயே கல்வி கற்கின்றனர் என்றார்.

Students study under umbrella in this government school.

அடுத்த செய்தி