ஆப்நகரம்

உலக எயட்ஸ் தினத்தை முன்னிட்டு மணல் சிற்பத்தில் உலக சாதனை

டிசம்பர் 1 – உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஒடிசாவில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 800 அடி நீளத்திற்கு சிவப்பு எயட்ஸ் ரிப்பன் வடிவமைத்து உலக சாதனை புறிந்துள்ளார்.

TNN 30 Nov 2017, 11:12 pm
டிசம்பர் 1 – உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஒடிசாவில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 800 அடி நீளத்திற்கு சிவப்பு எயட்ஸ் ரிப்பன் வடிவமைத்து உலக சாதனை புறிந்துள்ளார்.
Samayam Tamil sudarsan pattnaik is attempting a world record by creating worlds longest sand red ribbon
உலக எயட்ஸ் தினத்தை முன்னிட்டு மணல் சிற்பத்தில் உலக சாதனை

எய்ட்ஸ் ஒரு உயிர் கொல்லி நோய், இதை பரவாமல் தடுக்கவும், பாதிப்புகளை குறைத்தல், பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் பரிவு காட்டுதல் போன்றவற்றை வலியுறுத்தி இந்த உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இன்று உலக எய்ட்ஸ் தினம் என்பதால், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில், எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சின்னமான ரெட் ரிப்பனை மணல் சிற்பமாக வடித்துள்ளார்.

இது 800 அடி நீளத்திலும் 400 அடி அகலம் உள்ள பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டும் இதே போன்று, எய்ட்ஸ் தினத்திற்கு மணல் சிற்பம் அமைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி