ஆப்நகரம்

"வாட்ஸ் ஆப்பில் தலாக்":இளம்பெண்கள் புகார்..!

வாட்ஸ் ஆப் மூலம் தலாக் செய்ததாக கூறி,இளம்பெண் ஒருவர் தனது கணவர் மேல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

TNN 4 Mar 2017, 9:25 am
வாட்ஸ் ஆப் மூலம் தலாக் செய்ததாக கூறி,இளம்பெண் ஒருவர் தனது கணவர் மேல் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil talaq over whats appwoman complaints in police
"வாட்ஸ் ஆப்பில் தலாக்":இளம்பெண்கள் புகார்..!


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மெஹ்ரூன் நூர் என்ற இளம்பெண்ணிற்கு 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவருடைய கணவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனது வாட்ஸ் ஆப்பிலிருந்து மெஹ்ரூனுக்கு அவரது கணவர் தலாக் செய்தியை அனுப்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள மெஹ்ரூன் கணவரின் பெற்றோர்கள் அவரை வீட்டிலிருந்து வெளியேற சொல்லியுள்ளனர்.இதே போல பலமுறை நடந்ததை தொடர்ந்து,மெஹ்ரூன் நூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புகாரையடுத்து மெஹ்ரூனின் மாமியார் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.திருமணம் நடைபெற்ற சில நாட்களிலிருந்தே,மெஹ்ரூனை அவர்கள் கொடுமை செய்ய துவங்கியுள்ளனர்.எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்துவிடுவோம் எனவும் அவரை மிரட்டி வந்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Talaq over whats App,woman complaints in police

அடுத்த செய்தி