ஆப்நகரம்

தமிழ் மணப்பெண்ணின் கால் தெரியலாமா? புகைப்படத்தால் சர்ச்சை

தமிழ் மணப்பெண் கால் தெரியும் வகையில் சேலை அணிந்து ''ஜோடி'' என்ற தெற்கு ஆசிய நாளிதழ் ஒன்றுக்கு போஸ் அளித்து இருப்பது சமூக ஊடகங்களில் தற்போது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TOI Contributor 24 Mar 2017, 8:05 pm
தமிழ் மணப்பெண் கால் தெரியும் வகையில் சேலை அணிந்து ''ஜோடி'' என்ற தெற்கு ஆசிய நாளிதழ் ஒன்றுக்கு போஸ் அளித்து இருப்பது சமூக ஊடகங்களில் தற்போது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Samayam Tamil tamil bride wearing saree with slit sparks the debate
தமிழ் மணப்பெண்ணின் கால் தெரியலாமா? புகைப்படத்தால் சர்ச்சை


இந்தப் பத்திரிக்கையின் கவரில் வந்திருப்பவர் தனுஷ்கா சுப்பிரமணியம். மணப்பெண் போல பட்டுப் புடவை அணிந்து, நகைகள் அணிந்து, நிறைய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பேக்ரவுண்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இந்த இதழின் அட்டையில் வெளியாகி உள்ளது. எல்லாம் சரி, அது என்ன சேலை அணிந்து, அதில் ஒரு புறத்தில் கால் முழுவதும் தெரிவது போல போஸ் கொடுத்து இருக்கிறார் என்றுதானே பார்க்கிறீர்கள். இதுதான் தற்போது உலக அளவில் இருக்கும் தமிழர்கள் மட்டுமின்றி பண்பாட்டின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இவர்கள் தங்களது வெறுப்பையும், ஆதரவையும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த இதழ் கடந்த 13ஆம் தேதி வெளியாகியுள்ளது.

சிலர் தங்களது பேஸ்புக்கில், ''எந்த நாட்டில் மணப்பெண் இந்த மாதிரி சேலை அணிந்து இருக்கிறார். காட்டுங்கள் பார்க்கலாம்'' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர், ''இது தமிழர்களின் பண்பாடு கிடையாது'' என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, ''நீங்கள் ஆடை இல்லாமல் கூட இருங்கள். அதற்காக, பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிக்க வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ''ஜோடி இதழின் மணப்பெண் ஷோவை புறந்தள்ளுங்கள்'' என்று பதிவிட்டுள்ளனர்.

சிலரோ, ''இந்த ஷோவுக்கு பின் இருக்கும் உழைப்பு பற்றி தெரிந்து கொள்ளாமல், எதற்கு, ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்'' என்று ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.

#JodiBridalShow2017 என்ற பெயரில் நடந்த இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இதற்காக ஜோடி நாளிதழ் நன்றியும் தெரிவித்து பதிவிட்டுள்ளது. மேலும், தைரியமாக, மாற்றத்துக்கு தயாராகுங்கள் என்று இந்த இதழ் மூலம் செய்தியை அனுப்பியுள்ளனர்.

Tamil Bride Wearing Saree With Slit sparks the debate

அடுத்த செய்தி