ஆப்நகரம்

விடா முயற்சி, கடின உழைப்பு; 80 ஆண்டுகால கனவை நிஜமாக்கிய தமிழக விவசாயி!

முதியவர் ஒருவர், சிறு வயது கனவை 88 வயதில் நினைவாக்கிக் கொண்டார்.

Samayam Tamil 8 Jul 2018, 12:17 am
காஞ்சிபுரம்: முதியவர் ஒருவர், சிறு வயது கனவை 88 வயதில் நினைவாக்கிக் கொண்டார்.
Samayam Tamil TN Farmer


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தேவராஜன். தனது 8வது வயதில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை முந்திச் சென்ற காரைப் பார்த்துள்ளார். அந்த கார் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.

ஆனால் அதன் பெயர் தெரியாததால், காரின் லோகோவை மட்டும் நினைவில் வைத்துள்ளார். இது மெர்சிடஸ் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது 88வது பிறந்த நாளில், குடும்பத்தாரின் துணையுடன் வெள்ளை நிற பி-கிளாஸ் மெர்சிடிஸ் பென்ஸ் காரை தேவராஜன் வாங்கியுள்ளார்.

இவரின் கதையை அறிந்த பென்ஸ் கார் ஷோரூம், கார் வாங்க வந்தது முதல், அதனை வாங்கிச் செல்வது வரை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது. விவசாயி தேவராஜனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன.

இவர் கனவு காண்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதனை நிறைவேற்ற கடுமையாக உழைத்துள்ளார்.

Tamilnadu Farmer made his dreams true at age 88.

அடுத்த செய்தி