ஆப்நகரம்

ஊருக்குள் புகுந்த 3.5மீ நீள ராஜ நாகம்: அசால்ட்டாக பிடித்த அதிகாரிகள்

ஊருக்குள் புகுந்த 3.5மீ நீள ராஜ நாகத்தை, அசால்ட்டாக பிடித்து அதிகாரிகள் வனப்பகுதியில் விட்டனர்.

TNN 27 Apr 2017, 1:15 pm
உதகை: ஊருக்குள் புகுந்த 3.5மீ நீள ராஜ நாகத்தை, அசால்ட்டாக பிடித்து அதிகாரிகள் வனப்பகுதியில் விட்டனர்.
Samayam Tamil the forest department from nilgiris district have rescued a 3 5 metres length king cobra
ஊருக்குள் புகுந்த 3.5மீ நீள ராஜ நாகம்: அசால்ட்டாக பிடித்த அதிகாரிகள்


நீலகிரி மாவட்டம் அருகே உள்ள தேவல கரியன்ஷோலா வனப்பகுதிக்கு அருகே ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை வனப்பகுதிக்குள் இருந்து 3.5 மீட்டர் நீளமுள்ள ராஜ நாகப் பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது. பார்ப்பதற்கு மிரட்சியாக காணப்பட்ட பாம்பு, மெதுவாக ஊர்ந்து சென்று அங்குள்ள வீடு ஒன்றில் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். கொடிய விஷம் கொண்டதாக கருதப்படும் ராஜ நாகத்தை கண்டு, மக்கள் அச்சமடைந்தனர்.

உடனே கதவை மூடி, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யாருக்கும் பாதிப்பை ஏற்படாமல், பாம்பை பத்திரமாக பிடித்து கூண்டில் அடைத்தனர். பின்னர் அதை அருகிலுள்ள தேவாலா கரியன்ஷோலா வனப்பகுதியில் கொண்டு சென்று திறந்து விட்டனர்.

The forest department from Nilgiris district have rescued a 3.5 metres length King Cobra and released into the reserve at Devala Karianshola road on Thursday.

அடுத்த செய்தி