ஆப்நகரம்

இரண்டாவது குழந்தைக்கு சூப்பராக பெயர் வைத்த ஜீக்கர் பெர்க்

ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அலுவலர் மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு, இரண்டாவது குழந்தைப் பிறந்துள்ள நிலையில், தனது குழந்தைக்கு “ஆகஸ்ட்” என்று பெயரிட்டுள்ளார்.

TNN 29 Aug 2017, 9:09 am
ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அலுவலர் மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு, இரண்டாவது குழந்தைப் பிறந்துள்ள நிலையில், தனது குழந்தைக்கு “ஆகஸ்ட்” என்று பெயரிட்டுள்ளார்.
Samayam Tamil the mark zuckerberg names his second daughter as august
இரண்டாவது குழந்தைக்கு சூப்பராக பெயர் வைத்த ஜீக்கர் பெர்க்


உலகின் முன்னனி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க். இவர் தன்னுடைய இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக இரண்டு மாதம் விடுமுறை எடுப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளதால் ‘ஆகஸ்ட்’ என்று பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து தற்போது பிறந்திருக்கும் தன்னுடைய இரண்டாவது குழந்தை ‘ஆகஸ்ட்’ - க்கு கடிதம் எழுதிய அவர், அக்கடிதத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளால் நிகழ்காலத்தை விட்டு விட வேண்டாம் என்றும், இப்போது எங்களுடைய காலத்தை விட உன்னுடைய காலம் அளவற்ற அன்பும், நம்பிக்கையும் நிறைந்து இருக்கும் என்றும் குழந்தைக்கு எழுதியுள்ளார்.

அடுத்த செய்தி