ஆப்நகரம்

சாதி இல்லை என்று கூறும் நாட்டில் தொடரும் சாதிய வன்முறைகள் ?

மத்திய பிரதேச மாநிலம் வீட்டு உரிமையாளர் ஒருவர் , தன் வீட்டில் பணிபுரியும் தலித் பெண்ணின் மூக்கை அறுத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNN 18 Aug 2017, 3:25 pm
மத்திய பிரதேச மாநிலம் வீட்டு உரிமையாளர் ஒருவர் , தன் வீட்டில் பணிபுரியும் தலித் பெண்ணின் மூக்கை அறுத்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil the untouchability and violence against dalit community
சாதி இல்லை என்று கூறும் நாட்டில் தொடரும் சாதிய வன்முறைகள் ?


தலித் பெண்கள் மற்றும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் நரேந்திரசிங். இவருக்கு வயது 32 . இவரும் இவரின் தந்தையான சாகப் சிங்கும் தனது வீட்டில் வேலைப் பார்க்கும் தலித் பெண் மற்றும் அவரது கணவரை அடித்துள்ளனர்.அவர்கள் கூறிய வேலையை செய்ய முடியாது என்று மறுத்தால் அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.

மிக கொடூரமாக அடித்தால் அவரது கணவர் படுகாயம் அடைந்தார் . அந்த பெண்ணை கொடூரமாக அடித்துவிட்டு, அவரது மூக்கையும் அறுத்துள்ளனர்.சம்பவம் பற்றி மகளிர் ஆணைய தலைவர் லதா வாண்கடே விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடுகளில் பணிபுரியும் தம்பதியரை அடித்து காயப்படுத்தியதோடு, பெண்ணின் மூக்கை அறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.சம்பவம் நரோட்டம்பூர் கிராமத்திலும் நடந்துள்ளது. ரந்தீர் என்பவருக்குச் சொந்தமான வயலில் தலித் பெண் ஒருவர் கால்நடைக்கு புல் அறுத்துள்ளார்.

அப்போது நில உரிமையாளர் ரந்தீரும் அவரது மகனும் வந்தனர். தலித் பெண் நுழைந்ததால் தனது நிலம் தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி அப் பெண் வைத்திருந்த அரிவாளை வாங்கி அவருடைய மூக்கை நில உரிமையாளர் அறுத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது .

The untouchability and violence against Dalit community

அடுத்த செய்தி