ஆப்நகரம்

நவீன இந்தியாவில் அடிப்படை வசதி இல்லாத கிராமங்கள்

திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உடல்நலம் பாதித்த முதியவரை வாகன வசதிஇல்லாததால் கட்டிலில் தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Samayam Tamil 17 Aug 2017, 6:29 pm
திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உடல்நலம் பாதித்த முதியவரை வாகன வசதி இல்லாததால் கட்டிலில் தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Samayam Tamil the villages lacking basic infrastructure in digital india
நவீன இந்தியாவில் அடிப்படை வசதி இல்லாத கிராமங்கள்


இந்திய பிரதமர் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரையிலும் உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடம் பெற வேண்டும் என்னும் நோக்கில் பல வெளி நாடுகளுக்கும் சுற்றுபயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவை முன்னேற்ற, நவீன இந்தியா, தூய்மை இந்தியா போன்ற பல புதிய புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

இந்தியா வளர்ந்த நாடாக உருவாகிவிட்டது என்று கனவு கண்டுகொண்டிருக்கும் இந்த வேளையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல கிராமங்கள் இந்தியாவில் இருக்கிறது என்பதை அடிக்கடி வெளியாகும் செய்திகள் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. வட மாநிலங்களில் மட்டுமில்லாமல் நம் தமிழ்நாட்டிலும் கூட அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படாத பல கிராமங்கள் இன்றும் இருக்கின்றன. சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என எந்தவொரு அடிப்படைத் தேவையும் இல்லாமல் ஏராளமான கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் திருவள்ளுர் அடுத்த பூண்டி ஒன்றியத்தில் உள்ள திருப்பேர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பங்காரு பேட்டையில் வாகன வசதி இல்லாததால் உடல் நிலை பாதிக்கப்பட்ட முதியவரை கட்டிலில் தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருமாறு இக்கிராம மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The villages lacking basic infrastructure in digital India

அடுத்த செய்தி