ஆப்நகரம்

மன்னிப்பு தமிழா? உருதா??- இணையத்தில் பட்டிமன்றம் நடத்தும் இளைஞர்கள்!!

‘மன்னிப்பு’ என்ற சொல் தமிழ் சொல்லா அல்லது உருது சொல்லா என்று இளைஞர்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்

Samayam Tamil 15 Feb 2018, 4:12 pm
சென்னை: ‘மன்னிப்பு’ என்ற சொல் தமிழ் சொல்லா அல்லது உருது சொல்லா என்று இளைஞர்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil the word mannippu has become a debate on the social media
மன்னிப்பு தமிழா? உருதா??- இணையத்தில் பட்டிமன்றம் நடத்தும் இளைஞர்கள்!!


கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் வெறும் 9500 பணியிடங்களுக்கு, சுமார் 15 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்நிலையில், அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தற்போது அனைவர் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தேர்வில், ‘மன்னிப்பு’ எந்த மொழி சொல் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பல மாணவர்கள் தமிழ் மொழியென பதிலளித்திருந்தனர். ஆனால், பாடப்புத்தகத்தில் ‘மன்னிப்பு’ உருது மொழி சொல் என பாடபுத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சமூக வலைத்தளங்களில் சிலர் இது பற்றி பட்டிமன்றம் நடத்தினர். இந்நிலையில், நாக இளங்கோவன் என்பவர் இது பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பதிவில் “மன்னன், மன், மன்பதை, மன்னு போன்ற உயர்ந்த சொற்கள் மன் என்ற சொல்லில் இருந்து உருவாவதை அறியலாம். மன்றுதல் என்றால் தண்டனை தாராமல், தண்டம் மட்டும் செலுத்துவது.

இதிலிருந்து வந்ததுதான் மன்றித்தல், மன்றுதல், மன்றிப்பு ஆகியவை. இதில் உள்ள ‘றி’ நாளடைவில் திரிந்து ‘னி’ ஆக மாறியுள்ளது. எனவே மன்னிப்பு என்பது ஒரு தமிழ் சொல் தான்” என்று ஆணித்தனமாக தெரிவித்தார்.

இதன்பின், இவரது கருத்தை அடிப்படையாகக் கொண்டு பலரும் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி