ஆப்நகரம்

விசில் அடித்தால் விரைந்து வரும் காகங்கள்!

திருவான்மியூர் கடற்கரையில் காகங்களை விசில் அடித்து அழைத்து தினமும் உணவு வழங்கி வருகிறார் ஒரு பறவைகள் ஆர்வலர்.

TNN 13 Oct 2017, 2:04 pm
திருவான்மியூர் கடற்கரையில் காகங்களை விசில் அடித்து அழைத்து தினமும் உணவு வழங்கி வருகிறார் ஒரு பறவைகள் ஆர்வலர்.
Samayam Tamil this is how love for crows inherits from an old man
விசில் அடித்தால் விரைந்து வரும் காகங்கள்!


சென்னை தரமணியில் உள்ள மத்திய அணுசக்தி துறையின் கணக்கு மற்றும் அறிவியல் நிறுவனத்தில் பதிவாளராக பணிபுரிகிறார் எஸ்.விஷ்ணு பிரசாத். 55 வயதான இவர் திருவான்மியூர் கடற்கரையில் அதிகாலை நடைபயிற்சிக்குச் செல்வது வழக்கம்.

தினமும் நடைபயிற்சிக்குப் போகும் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விசில் அடித்ததும் அவரை சுற்றி ஏராளமான காகங்கள் கூடிவிடுகின்றன. அந்த காகங்களுக்கு அவர் தினமும் காராபூந்தி, பிஸ்கெட் போன்றவற்றை வழங்குகிறார்.

“சண்முகம் என்ற முதியவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே காகங்களுக்கு உணவு அளித்து வந்தார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் அந்த முதியவர் காகங்களுக்கு உணவு வழங்கும் நேரத்தில் அருகே இருந்த பூங்காவில் இருப்பதைப் பார்த்தேன். அவரை அணுகி கேட்டபோது, தன்னால் நடக்க முடியவில்லை என்று சொன்னார்.

அவர் இல்லாத இரண்டு நாட்களுக்கு நானே காகங்களுக்கு உணவு அளித்தேன். அதற்குப் பிறகு அந்த பெரியவரைப் பார்க்க முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று பின்னால்தான் தெரிந்தது. அவர் விட்டுச்சென்றதை நான் தொடர்ந்து செய்கிறேன்” என்று கூறுகிறார் விஷ்ணு.

அடுத்த செய்தி