ஆப்நகரம்

அமெரிக்காவில் பாதி பயன்படுத்திய சோப்புகளை என்ன செய்கிறார்கள் தெரியுமா?

பாதி பயன்படுத்திய சோப்புகளை, மறுசுழற்சி செய்து வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 29 Nov 2018, 5:04 pm
அமெரிக்க ஹோட்டல்களில் பாதி பயன்படுத்திய சோப்புகளை, மறுசுழற்சி செய்து வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil அமெரிக்காவில் பாதி பயன்படுத்திய சோப்புகளை என்ன செய்கிறார்கள் தெரியுமா?
அமெரிக்காவில் பாதி பயன்படுத்திய சோப்புகளை என்ன செய்கிறார்கள் தெரியுமா?


பொதுவாக நாம் ஒரு ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு குளியலறையில் நாம் பயன்படுத்துவதற்கு தனி சோப், ஷாம்பூ, ஹேர் கண்டிசனர், பாடி லோஷன் உள்ளிட்டவை இருக்கும். நாம் அங்கிருக்கும்வரை அதைப் பயன்படுத்துவோம்.

நாம் அங்கிருந்து சென்றுவிட்டால், அவற்றிற்குப் பதிலாக வேறொரு புதிய சோப், ஷாம்பூ மற்றும் கண்டிசனர் மாற்றி வைக்கப்படும். நாம் பாதி பயன்படுத்திய சோப்புகளும், ஷாம்பூ மற்றும் கண்டிசனர் உள்ளிட்டவை என்ன ஆகின்றது என்பது நமக்கு இதுவரை தெரியாது.

ஆனால், அமெரிக்காவில் ஹோட்டல்களில் பாதி பயன்படுத்தப்பட்ட சோப்புகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதற்கு, ஒரு அறைக்கு 70 சென்ட் மட்டுமே ஹோட்டல் நிர்வாகத்திற்கு செலவாகின்றது.

குளோபல் சோப் புராஜெக்ட் என்ற அமைப்புடன் கிளின் தி வோர்ல்ட் இணைந்து, இதை செய்து வருகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட இந்த சோப்புகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கபடுவதாக கூறப்படுகிறது. தூய்மையின்மை காரணமாகவே வயிற்றுப் போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் குழந்தைகளைப் பாதிப்பதாகவும், இதனால் வளரும் நாடுகளில் மக்கள் தூய்மையோடும் ஆரோக்கியத்துடனும் வாழலாம் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி