ஆப்நகரம்

கரூரில் டீ குடித்துக் கொண்டே இலவச வைஃபையும் பெறலாம்!!

கரூரில் டீக்கடை நடத்தும் ஒருவர் குறிப்பாக இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காக தனது கடையில் இலவச வைஃபை இணைப்பு கொடுத்து வருகிறார்.

TOI Contributor 31 May 2016, 10:17 am
கரூரில் டீக்கடை நடத்தும் ஒருவர் குறிப்பாக இளைஞர்களைக் கவர வேண்டும் என்பதற்காக தனது கடையில் இலவச வைஃபை இணைப்பு கொடுத்து வருகிறார்.
Samayam Tamil this tea shopper is giving free wifi to attract customers at karur
கரூரில் டீ குடித்துக் கொண்டே இலவச வைஃபையும் பெறலாம்!!


டீக்கடைக்காரர்கள் தங்களது கடைக்கு ஆட்களை வரவழைக்க செய்தித்தாள் வாங்குவார்கள் அல்லது அந்த ஊர் பெரியவர்கள் அனைவரும் அங்கு கூடி டீ குடித்துக் கொண்டே அரசியல் பேசுவார்கள்.

ஆனால், கரூர் - ஈசனத்தம் சாலையில் சேது டீக்கடை வைத்திருக்கும் ராமகிருஷ்ணன் வாடிக்கையாளர்களைக் கவர இலவச வைஃபை இணைப்பு கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மாதம் ரூ. 1,500 செலுத்தி இலவச இணைப்பு எடுத்து இருக்கிறேன். எனது தொழில் சிறக்க இது மிகவும் எனக்கு உதவுகிறது. காலையில் 10 கி.மீட்டர் நடந்து இந்த இலசவ இணைப்புக்காகவும், டீ குடிக்கவும் எனது கடைக்கு வருகின்றனர். எனது கடையில் டீ குடித்தால்தான், இலவச வைஃபை இணைப்பு என்று இல்லை. இலவச இணைப்பு பெறுவதற்கு தடைகள், நிர்பந்தங்கள் இல்லை. சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்கிறேன்'' என்கிறார்.

இவரது கடைக்கு கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். மாணவர்கள் கூறுகையில், ''அவரது சேவை எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. அடிக்கடி இணையதளத்தில் எங்களுக்கு தேவையான தகவல்களை எடுத்துக் கொள்வோம்'' என்கின்றனர்.

அடுத்த செய்தி