ஆப்நகரம்

குழந்தைக்கு பேரு ஆண்ட்ராய்டு, ஜியோனி, மிஸ்டு கால்...! அசத்தும் கிராம மக்கள்

ஆண்ட்ராய்டு, ஜியோனி, மிஸ்டு கால் உள்ளிட்ட புதுமையான பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்து, கிராம மக்கள் அசத்தி வருகின்றனர்.

TNN 18 Apr 2017, 10:01 am
புந்தி: ஆண்ட்ராய்டு, ஜியோனி, மிஸ்டு கால் உள்ளிட்ட புதுமையான பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைத்து, கிராம மக்கள் அசத்தி வருகின்றனர்.
Samayam Tamil this village in rajasthan has residents having names like rashtrapati samsung gionee
குழந்தைக்கு பேரு ஆண்ட்ராய்டு, ஜியோனி, மிஸ்டு கால்...! அசத்தும் கிராம மக்கள்


ராஜஸ்தான் மாநிலம் புந்தி அருகே உள்ளது ராம்நகர் கிராமம். 500 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட அக்கிராமத்தில், காஞ்சர் இன மக்கள் வசித்து வருகின்றனர். போதிய வசதிகள் இன்றி காணப்படும் அக்கிராமத்து மக்கள் படிப்பறிவின்றி காணப்படுகின்றனர். இந்நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு புதுமையான பெயர்கள் சூட்டி, அதனை உலகம் பேச வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக குழந்தைகளுக்கு ராஷ்ட்ரபதி, பிரதான் மந்திரி, சாம்சங், ஆண்ட்ராய்டு, சிம் கார்டு, சிப், ஜியோனி, மிஸ்டு கால், ராஜ்யபால், ஹை கோர்ட் உள்ளிட்ட பெயர்களை வைத்துள்ளனர்.

ஒருமுறை மாவட்ட கலெக்டர் அந்த கிராமத்தை பார்வையிட்டுள்ளார். அவரால் கவரப்பட்ட பெண் ஒருவர், தனது பேரக் குழந்தைக்கு கலெக்டர் என்று பெயர் வைத்துள்ளார். அக்கிராம மக்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சிறைக்கு சென்று வருகின்றனர். அதனால் காவலர்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, ஐஜி, எஸ்பி, ஹவல்தர், மேஜிஸ்டிரேட் என தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளனர். பல்வேறு தலைவர்களின் பெயர்களையும், ஊர்களின் பெயர்களையும் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கும் அந்த கிராமத்து மக்கள் விசித்திரமாகத் தான் காட்சி அளிக்கின்றனர்.

This village in Rajasthan has residents having names like Rashtrapati, Samsung, Gionee.

அடுத்த செய்தி