ஆப்நகரம்

இடி விழுந்து 15 அடி பள்ளம்! மக்கள் பீதி

உதகையில் நீர்இடி விழுந்ததில் நிலத்தில் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Samayam Tamil 6 Jun 2018, 9:46 am
உதகையில் நீர்இடி விழுந்ததில் நிலத்தில் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Samayam Tamil thunder in


கோடை காலம் உக்கிரம் முடிந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிய துவங்கியுள்ளது. இந்நிலையில், உதகையில் நேற்று இடிமின்னலுடன் கார் மேகம் சூழ்ந்தது. அப்போது, உதகை அருகே உள்ள எப்பநாடு பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று பலத்த சத்ததுடன் இடி விழுந்தது.

இதையடுத்து, இடிவிழுந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பார்த்தபோது, நீர்இடி விழுந்ததில் நிலத்தில் சுமார் 15 அடி ஆழத்துக்கு பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதைக்கண்டு பீதியடைந்த மக்கள், தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்புதுறை அதிகாரி சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளத்தை ஆய்வு செய்தனர். நீர் இடி விழுந்ததில் 15 அடி ஆழம், 12 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது.

அடுத்த செய்தி