ஆப்நகரம்

நன்றியுள்ள மாணவர்களால் நன்றாக இயங்கும் அரசுப் பள்ளி

முன்னாள் மாணவர்களின் உதவியால் கரூர் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.

Samayam Tamil 14 Oct 2018, 9:42 pm
முன்னாள் மாணவர்களின் உதவியால் கரூர் மாவட்டத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.
Samayam Tamil 153952502233047


கரூர் மாவட்டம் பரமத்தி அருகே தொட்டியப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1956ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 60 ஆண்டுகளை கடந்துவிட்ட இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் தற்போதும் இந்தப் பள்ளிக்கு பல உதவிகளைச் செய்துவருகிறார்கள்.

கடந்த 2010ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு மூர்த்தி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். அருகே பல தனியார் பள்ளிகள் தோன்றியதால் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைவதையும் பராமரிப்பின்றி இருப்பதையும் கவனித்த அவர் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கத்தை உருவாக்கினார்.

முன்னாள் மாணவர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களிடம் பள்ளியின் நிலையை விளக்கியுள்ளார். உடனே தன்னார்வத்துடன் பல முன்னாள் மாணவர்கள் அளித்த நிதியின் மூலம் பணத்தையும் கொண்டு பள்ளிக்கு சுற்றுச்சுவர், மேற்கூரை, டைல்ஸ் தரை, கழிப்பறைகள், மாணவர்களுக்கு வசதியான பெஞ்சுகள் என பல வசதிகள் கிடைத்தன.

இதனால் மாணவர்களின் சேர்க்கை உயந்தது. எனவே கூடுதல் ஆசிரியர்கள் பள்ளிக்குத் தேவைப்பட்டனர். அதுவரை இரண்டே ஆசிரியர்கள் இருந்த நிலையில் தலைமை ஆசிரியர் மூர்த்தி தானே சம்பளம் கொடுத்து இரு ஆசிரியர்களை நியமித்திருக்கிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இப்பள்ளியின் பொன்விழாவை முன்னிட்டு ஆங்கில வழிக் கல்வியும் தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறை, வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வசதியும் விரும்பமும் உள்ளவர்கள் அரசுப் பள்ளியைத் தத்தெடுக்கலாம் பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன் விஜயகுமார், இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்களை கட்டிக்கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி