ஆப்நகரம்

“உணவை வீணாக்காதீா்கள்” டப்பாவாலாக்கள் விழிப்புணா்வு மாரத்தான்

பொதுமக்களிடையே உணவை வீணடிக்க வேண்டாம் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் டப்பாவாலாக்கள் மாரத்தான் ஒன்றை நடத்தினா்.

Samayam Tamil 21 Jan 2018, 7:19 pm
பொதுமக்களிடையே உணவை வீணடிக்க வேண்டாம் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் டப்பாவாலாக்கள் மாரத்தான் ஒன்றை நடத்தினா்.
Samayam Tamil to promote roti bank initiative dabbawalas run in mumbai marathon
“உணவை வீணாக்காதீா்கள்” டப்பாவாலாக்கள் விழிப்புணா்வு மாரத்தான்


மும்பையில் வேலைக்கு செல்லும் நபா்களுக்கு அவா்களது வீடுகளில் இருந்து சுட சுட உணவை எடுத்து கொடுக்கும் பணியில் ஈடுபடுபவா்களை “டப்பாவாலாக்கள்” என்று அழைப்பா். இந்த டப்பாவாலாக்கள் மும்பையில் சமீபத்தில் ரொட்டி வங்கி ஒன்றை தொடங்கினா். மேலும் இங்கு தகவல் மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தங்கள் இல்லங்களில் அளவுக்கு அதிகமாக உள்ள உணவு குறித்து இவா்களுக்கு தகவல் தொிவிக்கும் பட்சத்தில் இவா்கள் அதனை பெற்று பசியில் வாடக்கூடிய தெருவோர மக்களுக்கு விநியோகம் செய்கின்றனா். இந்த ரொட்டி வங்கியை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கத்தில் உணவை வீணாக்காதீா்கள் என்ற பெயாில் இன்று மாரத்தான் ஒன்றை நடத்தினா்.

மும்பை டப்பாவாலா அமைப்பின்(எம்.டி.ஏ.) செய்தித் தொடர்பாளர் சுபாஷ் தலேக்கர் கூறுகையில், ''நாள் ஒன்றுக்கு 2 லட்சம் டிபன் பாக்ஸ்களில் உள்ள உணவுகளை நாங்கள் உரியவர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறோம். இந்த மாரத்தான் போட்டியின் போது கூட பசியோடு இருக்கும் மக்களுக்கு நாங்கள் உணவுகளை வழங்கினோம்.

அதுமட்டுமல்லாமல், மாரத்தான் ஓடும் சாலையில், கிடக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையும் எங்கள் உறுப்பினர்கள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தார்கள்” என்று அவா் தெரிவித்தார்.

அடுத்த செய்தி