ஆப்நகரம்

ராணுவ வீரர்கள் உணவு பிரச்னையால் உயிரிழக்காமல் இருக்க பாம்பு, தேள்களை உண்ண பயிற்சி

நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், பல்வேறு சூழ்நிலை, கால்நிலை நிலவும் எல்லைப்பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

TNN 3 Mar 2017, 11:46 am
நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், பல்வேறு சூழ்நிலை, கால்நிலை நிலவும் எல்லைப்பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil trained to eat snakes and scorpions indian soldiers
ராணுவ வீரர்கள் உணவு பிரச்னையால் உயிரிழக்காமல் இருக்க பாம்பு, தேள்களை உண்ண பயிற்சி

இந்த நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தற்போது பாம்பு, தேள் உள்ளிட்ட உயிரினங்களை எப்படி சாப்பிடுவது என பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

ராணுவ வீரர்கள் பல்வேறு கால நிலை, சூழலில் பணியாற்றும் போதும், அவசர நிலையின் போதும் போதுமான உணவு கிடைக்காத சூழல் உருவாகும் போது, இயற்கையில் கிடைக்கும் பாம்பு, தேள் உள்ளிட்ட உயிரினங்களை சாப்பிட்டு உயிர் வாழ முடியும்.

மிசோரமில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது வீரர்களின் உயிரை காக்கும் பயிற்சி எனவும் ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அண்மையில், சில ராணுவ வீரர்கள் தங்களுக்கு சரியான அளவு உணவு வழங்கப்படுவதில்லை என சமூக வலைதளம் மூலம் புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவசர காலங்களை சமாளிக்க இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்த செய்தி