ஆப்நகரம்

விமானத்தில் தன் ஆசிரியரை கவுரவித்த விமானி... நெகிழ்ச்சி நிகழ்வு

துருக்கியில் தான் ஓட்டும் விமானத்தில் பயணம் செய்த ஆசிரியரை விமானி கவுரவித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 1 Dec 2018, 10:31 am
தன்னை விட தன்னிடம் பயின்றவர் பெரிய ஆளாக வர வேண்டும் என விரும்புபவர்கள் ஆசிரியர்கள் மட்டும் தான். எந்த ஆசிரியரும் தனது மாணவன் தன்னைவிட வளர்ந்த விட கூடாது என்று நினைப்பதில்லை.
Samayam Tamil pilot


அதே போல பல மாணவர்கள் வளர்ந்து மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றாலும் அவர்களும் தங்கள் ஆசிரியர்களை மறவாது மனிதில் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் மீது மனிதில் மரியாதையுடனும் பணிவுடனும் இருக்கின்றனர். இது அந்த ஆசிரியர்களை எதிர்ச்சியாக சந்திக்கும் போது நிச்சயம் வெளிப்படும்.

இப்படியாக துருக்கி நாட்டில் ஒரு ஆசிரியர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்வதற்காக விமானத்தில் ஏறியுள்ளார். அப்பொழுது விமானியிடம் இருந்த ஒரு அறிவிப்பு வருகிறது.

அதில் இந்த ஆசிரியர் குறித்தும் அவரது பணி குறித்தும் அந்த விமான உருக்கமாக விவரிக்கிறார். அதன் பின் விமானி தான் அந்த ஆசிரியரின் மாணவன் எனவும், தனக்கு பிடித்தமான ஆசிரியர் இவர் தான் எனவும் எல்லோருக்கும் கேட்கும் படி மைக்கிலேயே அறிவித்தார்.

அதன் பின் விமான ஊழியர்கள் வரிசையாக வந்து ஆசிரியருக்கு பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பாக அளித்து அந்நாட்டு கலாச்சாரப்படி அவரது கையில் முத்தமிட்டு அவருக்கு மரியாதை செய்தனர்.

அதன் பின் வந்த விமானி அந்த ஆசிரியருக்கு மரியாதை செய்து கட்டியனைத்து தான் இந்த நிலையில் இருப்பதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என கூறி அவருக்கு நன்றி கூறினார்.

இச்சம்பவம் அந்த விமானத்தில் வந்த மற்ற பயணிகளின் கண்களை கலங்க வைத்தது. இச்சம்பவத்தை அந்நாட்டின் பிரபல பத்திரிக்கையாளர் இஷ்துஸாம் உல் ஹக் என்ற பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண்பவர்களும் கண்களும் கலங்கும் வகையில் இருந்தது. இந்த டுவிட்டர் பதிவிற்கு பலர் தங்களின் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து பதில் அளித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி