ஆப்நகரம்

கழிவுநீர் கலந்த நீரை குடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்

திருத்தணி பகுயில் விநியோகிக்கப்பட்ட கழிவு நீர் கலந்த நீரை குடித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

TNN 13 Aug 2016, 5:03 pm
திருத்தணி : திருத்தணி பகுயில் விநியோகிக்கப்பட்ட கழிவு நீர் கலந்த நீரை குடித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil two dead as sewage water mingled with drinking water in tiruttani
கழிவுநீர் கலந்த நீரை குடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்


திருத்தணியின், சொரக்காய்பேட்டை பகுதியில் உள்ள ஆச்சாரி தெரு மற்றும் தோப்பு தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக கூற்பப்டுகிறது. இந்த குடிநீரை குடித்தததில், அப்பகுதியில் பலர் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உண்ணாமலை, கண்ணப்பன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீர் குடிப்பதற்கு தகுதியில்லாதது என ஜனவரி மாதமே சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும் இங்கு குடிநீர் கலந்த நீரையே தொடர்ந்து விநியோகிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குடிநீர் எடுக்கப்படும் ஆழ்துளை கிணற்றை மூடும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி