ஆப்நகரம்

பிரசவத்தின் போது சிறுநீரகம் திருடிய மருத்துவர்கள்: பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

பிரசவத்திற்காக சென்ற 30 வயது பெண்ணிடம் இருந்து, சிறுநீரகம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

TNN 20 Aug 2016, 3:45 pm
பெரைய்லி: பிரசவத்திற்காக சென்ற 30 வயது பெண்ணிடம் இருந்து, சிறுநீரகம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil up hospital steals kidney during childbirth
பிரசவத்தின் போது சிறுநீரகம் திருடிய மருத்துவர்கள்: பெண் பரபரப்பு குற்றச்சாட்டு


உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பெரைய்லியைச் சேர்ந்த ரோஹித் அக்னிஹோத்ரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பிரசவம் முடிந்த பின்னர், தன்னுடைய சிறுநீரகம் முறைகேடாக அறுவை சிகிச்சை செய்து திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

ஆனால் இந்த புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. பிரசவத்திற்காக 30 நிமிடங்கள் அறுவைச் சிகிச்சை செய்யும் போது, சிறுநீரகத்தை எடுப்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் தெலங்கானாவில் சிறுநீரக மோசடியில் 52 டோனர்கள், பெறுபவர்கள், ஏஜெண்ட்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இந்திய சட்டப்படி, சிறுநீரகம் தானமாக வழங்க ரத்த சம்பந்தம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு இல்லையெனில் அரசு தரப்பில் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளது.

அடுத்த செய்தி