ஆப்நகரம்

குதிரைக்கு உடம்பு சரியில்ல; காசை அள்ளிக் கொடுத்த காப்பாற்றிய பார்வையற்ற பெண்

உடல்நிலை சரியில்லாத குதிரைக்கு பார்வையற்ற பெண், ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

TNN 20 May 2017, 2:46 pm
நியூயார்க்: உடல்நிலை சரியில்லாத குதிரைக்கு பார்வையற்ற பெண், ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
Samayam Tamil us girl spends rs 30k dollar for her horse treatment
குதிரைக்கு உடம்பு சரியில்ல; காசை அள்ளிக் கொடுத்த காப்பாற்றிய பார்வையற்ற பெண்


உடல் ஊனமுற்றவர்களுக்கு வீட்டு விலங்குகள் ஆதரவாக இருப்பது உலகம் முழுக்க வழக்கமாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏராளமானோர் தங்கள் இருப்பிடங்களில் ஒரு பாதுகாவலுக்காக விலங்குகளை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. வழிகாட்டும் அல்லது பாதுகாவலாக நாய்கள், குதிரைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் எடி என்ற பெண்ணுக்கு பார்வை தெரியாததால், தன்னுடன் குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு பாண்டா என்றும் பெயரிட்டுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக வழிகாட்டியாக குதிரை இருந்து வரும் நிலையில், திடீரென அதற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குதிரையை மருத்துவரிடம் அப்பெண் அழைத்து சென்றார். அதற்கு குடல் பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் ரூ.30000 டாலர் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர். உடனே தான் சேமித்து வைத்திருந்த தொகையை மருத்துவரிடம் அளித்து சிகிச்சை அளிக்கச் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

US girl spends Rs.30k dollar for her horse treatment.

அடுத்த செய்தி