ஆப்நகரம்

இதயமே இல்லை என்று இனிமேல் யாரும் இவரை கூற முடியாது!!

இதயம் இல்லாமல் செயற்கை இதயத்துடன் அமரிக்காவில் வாழ்ந்து வந்த தன்னம்பிக்கை மனிதருக்கு மாற்று இதயம் கிடைத்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

TNN 11 Jun 2016, 5:16 pm
வாஷிங்டன்: இதயம் இல்லாமல் செயற்கை இதயத்துடன் அமரிக்காவில் வாழ்ந்து வந்த தன்னம்பிக்கை மனிதருக்கு மாற்று இதயம் கிடைத்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
Samayam Tamil using device in backpack man survived 555 days without human heart
இதயமே இல்லை என்று இனிமேல் யாரும் இவரை கூற முடியாது!!


இரக்கம் இல்லா மனிதர்களை இதயம் இல்லாதவர்கள் என நாம் கூறுகிறோம். அப்பேற்பட்ட இன்றியமையாத மனித உறுப்பு இதயம் ஆகும். ஆனால், அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்த ஸ்டான் லார்க்கின் என்பவர் இதயம் இல்லாமல் 555 நாட்கள், அதாவது; சுமார் ஒன்றரை ஆண்டுகள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துள்ளார்.

ஸ்டான் லார்க்கினுக்கு தற்போது 25 வயது ஆகிறது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு மரபுசார்ந்த இதய நோய் தாக்கியது. தொடர்ந்து, அந்த நோயுடன் போராடி வந்த அவரது இதயம் செயலிழக்கும் நிலைக்கு உள்ளானது. அப்போது மாற்று இதயம் கிடைக்காது என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவருக்கு பொருத்தமான மாற்று இதயம் கிடைக்கும்வரை தற்காலிகமாக செயற்கை இதயத்தை அவருக்கு பொருத்த முடிவு செய்தனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது பாதிக்கப்பட்ட இதயம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. செயற்கை இதயம் என்றால், சிறிய அளவிலான இதயம் அல்ல. பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு புத்தகம் சுமப்பது போல். கொசு மருந்து அடிப்பவர் முதுகில் சுமக்கும் கருவி போன்ற ஒரு செயற்கை இதயம் அவருக்கு பொருத்தப்பட்டது.



அதாவது ஒரு மெஷின் போன்று இருக்கும் அந்த இந்த செயற்கை இதயம், ஸ்டான் லார்க்கினின் விலா எலும்புக்கு அடியில் ஒரு குழாய் மூலம் அவரது உடலுடன் இணைக்கப்பட்டு, ரத்த சுழற்சியை மேற்கொள்ளும்படி பொருத்தப்பட்டது.

தொடர்ந்து, மருத்துவர்களின் அனுமதியோடு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து தனது இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கினார் லார்க்கின். அனைவரும் செய்வது போல், கார் ஓட்டுவது, கூடைப்பந்து விளையாடுவது, என சாதாரண வாழ்க்கையை நம்பிக்கையுடன் சுமார் 555 நாட்கள் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அவருக்கு மாற்று இதயம் கிடைக்கவே, அறுவை சிகிச்சை மூலம் செயற்கை இதயம் அகற்றப்பட்டு மாற்று இதயம் பொருத்தப்பட்டது. தற்போது, ஸ்டான் லார்க்கின் குணமடைந்து வருகிறார்.

இதனிடையே, அவரது சகோதரருக்கும் இதே வகையிலான நோய் தாக்கியது. அப்போது, தன்னம்பிக்கை மனிதரான லார்க்க்கின் இந்த மெஷின் அளவு செயற்கை இதயத்துடன் இன்னும் சில காலம் தாக்குப்பிடிப்பார் என்று கருதிய மருத்துவர்கள், லார்க்கிற்கு முன்னதாகவே அவரது சகோதரருக்கு மாற்று இதயத்தை பொருத்தினர்.

அடுத்த செய்தி