ஆப்நகரம்

இப்படியும் ஓர் திருமண அழைப்பிதழ்!

திருமண அழைப்பிதழ்களை வித்யாசமாக வடிவமைப்பது இன்றைய நவநாகரீக உலகில் பிரபலமாகி விட்டது. குறிப்பாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு வித்யாசமாக இதுவரை யாரும் வடிவமைக்கா விதத்தில் வரவேற்பு அட்டை வடிவமைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Samayam Tamil 1 Jan 2019, 10:46 am
திருமண அழைப்பிதழ்களை வித்யாசமாக வடிவமைப்பது இன்றைய நவநாகரீக உலகில் பிரபலமாகி விட்டது. குறிப்பாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு வித்யாசமாக இதுவரை யாரும் வடிவமைக்கா விதத்தில் வரவேற்பு அட்டை வடிவமைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
Samayam Tamil reception card


லே அவுட் ஆட்டிஸ்டுகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வித்யாசமான அழைப்பிதழ் மாடல்களைக் காண்பிக்கின்றனர். இந்நிலையில் நீதிமன்ற சம்மன் நோட்டீஸ் வடிவில் ஒரு அழைப்பிதழ் டுவிட்டரில் வைரலாகிவருகிறது. இது பலரை ‘அட…’ சொல்ல வைத்துள்ளது. மாப்பிள்ளை விஷ்ணு மணி மற்றும் மணமகள் அருந்ததி ஆகியோர் வழக்கறிஞர்களாவர்.
இதுபோல மணமக்கள் தாங்கள் வேலைபார்க்கும் துறை சார்ந்த அழைப்பிதழ்களை அச்சடிக்க விரும்புவதாக திருமண அழைப்பிதழ் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோர்ட் சம்மன் நோட்டீஸ் போன்ற இந்த திருமண அழைப்பிதழ் புதுமையாக உள்ளதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டாக்டர்கள், ரயில்வே பணியாளர்கள், வேதியியல் ஆசிரியர்கள், மெகானிக்குகள், ஐடி பணியாளர்கள், மீடியா, சினிமா துறையில் இருப்பவர்கள் என பல்வேறு துறையினருக்காக பலவிதமான வடிவங்களில் திருமண அழைப்பிதழ்கள் தயார் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் சினிமாத்துறையில் வேலை செய்த விஸ்காம் பயின்ற மாணவர்கள் இந்த லே அவுட் டிசைனில் ஈடுபடுவதால் அவர்களது செயல்பாடு மிகவும் நேர்த்தியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்