ஆப்நகரம்

"துண்டிக்கப்பட்ட தலையை கடலூரில் வீசியது ஏன்?"- கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்..!

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டவரின் துண்டிக்கப்பட்ட தலையை, கடலூர் காவல் நிலையத்தில் வீசியது ஏன்? என கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

TNN 13 May 2017, 1:01 pm
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டவரின் துண்டிக்கப்பட்ட தலையை, கடலூர் காவல் நிலையத்தில் வீசியது ஏன்? என கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Samayam Tamil why severed head of puducherry youth hurled at cuddalore police station
"துண்டிக்கப்பட்ட தலையை கடலூரில் வீசியது ஏன்?"- கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்..!


சில நாட்களுக்கு முன்னர் கடலூரில் உள்ள ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில், ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையை மர்ம நபர்கள் வீசிச் சென்றது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், துண்டிக்கப்பட்ட தலை புதுச்சேரியைச் சேர்ந்த சுவேதன் (17) என்பவருடைய என்பதும் அவரின் நெருங்கிய நண்பர்களே முன் விரோதம் காரணமாக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளதும் தெரிய வந்தது. சம்பவம் நடந்த மறுநாள், இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சுவேதனின் நண்பர்களான வினோத் (24) மற்றும் தாஸ் (17) ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு வழக்கில் தங்களை காவல்துறையினரிடம் காட்டிக் கொடுத்ததற்காக சுவேதனை கொலை செய்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர். கொலையை புதுச்சேரியில் நிகழ்த்திவிட்டு, துண்டிக்கப்பட்ட தலையை கடலூர் காவல் நிலையத்தில் வீசியதற்காக அவர்கள் கூறிய காரணம் காவல் துறையினரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

”சுவேதனை கொலை செய்த பின்னர், அவனது ஒவ்வொரு உடல் பாகத்தையும், ஒவ்வொரு காவல் நிலையத்தில் வீசிவிட நினைத்தோம். இப்படி செய்தால் எங்களை அனைவரும் பெரிய அளவில் பேசுவார்கள் என இப்படி ஒரு திட்டம் வைத்திருந்தோம். ஆனால் அதற்குள் ஆட்கள் கூடிவிட்டதால், அங்கிருந்து சுவேதனின் தலையுடன் தப்பித்து வந்துவிட்டோம்.

புதுச்சேரி சிறையில் சாப்பாடு, அடிப்படை வசதிகள் மோசமாக இருக்கும். இதுவே கடலூர் சிறை என்றால் அனைத்து வசதிகளும் நன்றாக இருக்கும். மேலும் சிகரெட், கஞ்சா போன்றவையும் கிடைக்கும். எனவேதான் சுவேதன் தலையை, கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வீசிச் சென்றோம்.” என அவர்கள் இருவரும் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

why severed head of Puducherry youth hurled at cuddalore police station ?

அடுத்த செய்தி