ஆப்நகரம்

குரங்கு துரத்தியதில் மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்

துணி காயப்போட மாடிக்கு சென்ற 65 வயது நபரை குரங்கு துரத்தியதில், மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 7 Jun 2018, 8:28 pm
ஆக்ரா : துணி காயப்போட மாடிக்கு சென்ற 65 வயது நபரை குரங்கு துரத்தியதில், மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil monkey


உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா மற்றும் பொரிஜாபாத்தில் குரங்குகளின் தொல்லை, தாக்குதல் அதிகரித்து வருகின்றன. பலர் குரங்கு தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனயில் சிகிச்சை பெறுகின்றனர்.

அந்த வகையில் ஆக்ராவில் உள்ள துண்ட்லாவின், கிருஷ்ணாபுரம் காலனியில் வசித்து வந்த சம்புநாத் என்பவர் காலையில் துவைத்த, துணியை காயப்போடுவதற்காக மாடிக்கு சென்று கொடியில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்குகளில் ஒன்று சம்புநாத்தை துரத்தியுள்ளது.

பயத்தில் ஓடிய சம்புநாத் என்ன செய்வதென்று தெரியாமல் மாடியின் ஓரப்பகுதிக்கு சென்றுள்ளார். இதில் தவறி விழுந்த அவர் படுகாயமடைந்து உயிரிழ்ந்து விட்டதாக அதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவில் மக்களுக்கு தொந்தரவாக உள்ள குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விட உத்தரவிட்டது. மேலும் காடுகளை அழிப்பதை தடுக்க வேண்டும் என்றும், குரங்குகளை பிடிக்கவும், அப்பகுதியிலிருந்து விரட்டவும் வன உயிரிகள் கல்விநிறுவனத்திடம் ஆலோசனை கேட்டுள்ளது.

அடுத்த செய்தி