ஆப்நகரம்

இரு பெண் குழந்தைகளை பாலூட்டும்போது மார்போடு அழுத்தி கொன்ற தாய்!

மீண்டும் பெண்குழந்தை, அதுவும் இரட்டை குழந்தை பிறந்ததால், மன வேதனைக்கு ஆளான பெண், தன் குழந்தைகளை பாலூட்டும் போது மார்போடு அழுத்தி கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

TNN 6 Jun 2017, 6:01 pm
நாகர்கோவில் : மீண்டும் பெண்குழந்தை, அதுவும் இரட்டை குழந்தை பிறந்ததால், மன வேதனைக்கு ஆளான பெண், தன் குழந்தைகளை பாலூட்டும் போது மார்போடு அழுத்தி கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.
Samayam Tamil woman arrested murdering her twin infants
இரு பெண் குழந்தைகளை பாலூட்டும்போது மார்போடு அழுத்தி கொன்ற தாய்!


நாகர்கோயில், ஈத்தா மொழி அருகே காற்றாடிதட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (39). இவர் மனைவி திவ்யா (29). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அடுத்து ஆண் குழந்தை எதிர்பார்த்த நிலையில், இவரகளுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது.

பாலூட்டும் போது கொலை:
மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால், அவர் கணவரும், அவரது வீட்டாரும் சரியாக பேசவில்லை என்றும் வெறுப்போடு இருந்ததாக கூறப்பட்டுகின்றது. இதனால் அந்த குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்போடு அழுத்தி புரையேற வைத்து கொலை செய்து அவசர, அவசரமாக குழந்தைகளை புதைத்துள்ளனர்.

விசாரணை:

குழந்தைகள் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தால் விசாரிக்க, குழந்தைகள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுத்து உடற்கூறு அறுவை சிகிச்சை செய்தனர்.
அதில் குழந்தைகள் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து திவ்யாவிடம் விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார்.



கொலைக்கு இதுதான் காரணம்:

திவ்யாவின் கணவருடன் பிறந்தவர்கள் 3 பேர் அவர்களுக்கு திருமணமாகி அனைவருக்கும் பெண் குழந்தைகள் இருந்துள்ளது. இந்த சூழலில் திவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இரண்டாவது முறையும் இரட்டை பெண் குழந்தை பிறந்ததால் அதை பார்க்க கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவில்லையாம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யா பெண் குழந்தைகளை கொல்ல இப்படி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி