ஆப்நகரம்

டெங்கு பற்றி உயர் அதிகாரிகள் அவசர கூட்டம்; கோலம் போட்டு அலட்சியப்படுத்திய அதிகாரி!

டெங்கு ஆய்வு கூட்டத்தில் கோலம் போட்டு பொழுதை கழித்த பெண் அதிகாரியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

TNN 26 Oct 2017, 1:17 pm
சிவகங்கை: டெங்கு ஆய்வு கூட்டத்தில் கோலம் போட்டு பொழுதை கழித்த பெண் அதிகாரியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil woman draws rangoli in dengue review meeting
டெங்கு பற்றி உயர் அதிகாரிகள் அவசர கூட்டம்; கோலம் போட்டு அலட்சியப்படுத்திய அதிகாரி!


தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

காய்ச்சலுக்கு மூலகாரணமாக விளங்கும் கொசுவை ஒழிக்க, வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் முதல் அதிகாரிகள் வரை நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு ஆய்வுக் கூட்டத்திற்கு, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் பெண் அதிகாரி ஒருவர் குறிப்பெடுக்க அளிக்கப்பட்ட காகிதத்தில், கோலம் போட்டு பொழுதை கழித்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய அரசு அதிகாரிகளே அலட்சியம் காட்டினால், எப்படி முன்னேற்றம் ஏற்படும்.

Woman draws rangoli in Dengue review meeting.

அடுத்த செய்தி