ஆப்நகரம்

ஐபோன் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம்; சர்ச்சையில் சிக்கிய டுபாக்கூர் மருத்துவமனை!

ஐபோன் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TNN 9 Oct 2017, 4:11 pm
பிரித்தானியா: ஐபோன் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman gave birth to baby in iphone light
ஐபோன் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம்; சர்ச்சையில் சிக்கிய டுபாக்கூர் மருத்துவமனை!


பிரித்தானியாவின் மேற்கு யார்க்‌ஷயர் கவுண்டியைச் சேர்ந்தவர் கிளாயர் ஜோன்ஸ்(28). இவர் பிரசவ வலி ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பிரசவ வார்டில் கிளாயருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அறை முழுவது இருட்டானது. மேலும் மின்சாரத்தை உடனடியாக கொண்டு வர எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவர் ஒருவரின் ஐபோனில் உள்ள டார்ச் மூலம், பிரசவம் பார்க்கப்பட்டது. அதனை உதவியாளர் ஒருவர் கையில் பிடித்துக் கொண்டார். இந்த சூழலில் கிளாயருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிளாயர், இருட்டில் நடந்த பிரசவம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். தன்னை மருத்துவர்கள் மரியாதை நடத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இந்த செயலுக்கு கிளாயரின் கணவரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து யார்க்‌ஷயர் மருத்துவமனை நிர்வாகத்தினர், அந்த தம்பதிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

Woman gave birth to baby in iPhone light.

அடுத்த செய்தி