ஆப்நகரம்

சிரிக்க வைத்து சாகடித்த மருத்துவர்கள்

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் வாயு அளிப்பதற்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு அளித்ததால் நோயாளி மரணமடைந்த வழக்கில் தமிழக அரசு, பெண்ணின் கணவருக்கு ரூ. 28.37 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 3 Sep 2016, 6:36 pm
மதுரை : சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு ஆக்சிஜன் வாயு அளிப்பதற்கு பதிலாக சிரிப்பூட்டும் வாயு அளித்ததால் நோயாளி மரணமடைந்த வழக்கில் தமிழக அரசு, பெண்ணின் கணவருக்கு ரூ. 28.37 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil woman given laughing gas for oxygen tamil nadu to pay rs 28 lakh
சிரிக்க வைத்து சாகடித்த மருத்துவர்கள்


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் ருக்மனி என்ற பெண் கடந்த 2011 மார்ச் 18ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிஜன் வாயு அளிப்பதற்கு பதிலாக, சிரிக்க வைக்கும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவை தவறுதலாக அளிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் சுயநினைவற்ற கோமா நிலையை அடைந்தார்.

இதனால் 2012 மார்ச் 4ம் தேத் ருக்மணி இறந்தார். இந்நிலையில் 2013ம் ஆண்டு ருக்மணியின் கணவர் கணேஷ் தனது மனைவியின் மரணத்திற்காகவும், இரண்டும் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் ரூ. 50 லட்சம் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை பாதிக்கப்பட்ட ருக்மணியின் கணவர் கணேஷ்-க்கு ரூ. 28.37 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

அடுத்த செய்தி