ஆப்நகரம்

மதுபான பார் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பெண் மந்திரி..!

உத்திர பிரதேசத்தில் மதுபான பார் திறப்பு விழாவில் பெண் மந்திரி ஒருவர் கலந்து கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TNN 30 May 2017, 8:30 am
உத்திர பிரதேசத்தில் மதுபான பார் திறப்பு விழாவில் பெண் மந்திரி ஒருவர் கலந்து கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman minister of up participated in inauguration of liquor bar
மதுபான பார் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பெண் மந்திரி..!


உத்தரபிரதேச மாநிலம் கோமதி நகர் பகுதியில் புதிதாக மதுபான பார் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மதுபான பாரின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட, உத்தரபிரதேச வெள்ளத்தடுப்பு மற்றும் வேளாண் இறக்குமதி துறை இணை அமைச்சர் ஸ்வாதி சிங் அந்த பாரை திறந்து வைத்தார்.

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற இந்த திறப்பு விழா குறித்த படங்கள், தற்போதுதான் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஸ்வாதி சிங்கிற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட உத்தரபிரதேச எதிர்கட்சிகளான சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை ஸ்வாதி சிங்கையும், உத்தர பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத்தையும் சரமாரியாக வசை பாடி வருகின்றன.

ஒருபுறம் மதுபான கடைகளை மூட வேண்டும் என உ.பி பெண்கள் போராடி வரும் போது, ஒரு பெண் அமைச்சரே இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா?என ஸ்வாதி சிங்கிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்வாதி சிங், மாயாவதியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் தயாசங்கர் சிங்கின் மனைவியாவார்.

Woman Minister of UP participated in Inauguration of liquor bar

அடுத்த செய்தி