ஆப்நகரம்

ஆண் நண்பருடன் டேட்டிங் சென்ற பெண்ணுக்கு கசையடி

இந்தோனேசிய நாட்டின் பந்தா ஏஸ் மாகாணத்தில் திருமணம் ஆவதற்கு முன்னர் ஆண் நண்பருடன் டேட்டிங் சென்ற பெண்ணுக்கு, பொதுமக்கள் மத்தியில் கசையடி தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 2 Aug 2016, 2:59 pm
சுமத்ரா: இந்தோனேசிய நாட்டின் பந்தா ஏஸ் மாகாணத்தில் திருமணம் ஆவதற்கு முன்னர் ஆண் நண்பருடன் டேட்டிங் சென்ற பெண்ணுக்கு, பொதுமக்கள் மத்தியில் கசையடி தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman whipped on street before baying crowd for dating
ஆண் நண்பருடன் டேட்டிங் சென்ற பெண்ணுக்கு கசையடி


இந்தோனேசிய நாட்டின் பந்தா ஏஸ் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் திருமணத்திற்கு முன்பு வெளியே டேட்டிங் சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது அம் மாகாண போலீசாரிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து, அவருக்கு தண்டனை வழங்கும்படி ஷரியா சட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பர்தா அணிந்த பெண் காவலர் ஒருவர் அப்பெண்ணை அழைத்து வந்து பள்ளிவாசல் ஒன்றின் முன்னர் தண்டனை அளிக்கும் இடத்தில் மண்டியிட்டு அமர வைக்கிறார். அதன்பின்னர், பர்தா அணிந்த ஆண் காவலர் ஒருவர், அப் பெண்ணுக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார். அதனையடுத்து, அப் பெண்ணின் ஆண் நபருக்கும் இதே போல் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாகாணத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டும் முதல் ஷரியா சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, மது அருந்துதல், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு, ஓரின சேர்க்கை, சூதாடுதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொழுபோக்கு இடங்களில் ஆண் (சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஆண்கள் துணை) துணை இல்லாமல் இரவு 11 மணிக்கு மேல் பெண்கள் இருக்க கூடாது. இந்த சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி