ஆப்நகரம்

ஆத்தாடி..இவ்வளவு நீளமான பூனையா?

உலகின் மிக நீளமான பூனை என்ற சாதனையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒமர் என்ற பூனை படைக்க இருக்கிறது.

TNN 19 May 2017, 12:53 am
உலகின் மிக நீளமான பூனை என்ற சாதனையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒமர் என்ற பூனை படைக்க இருக்கிறது.
Samayam Tamil worlds longest cat is in australia
ஆத்தாடி..இவ்வளவு நீளமான பூனையா?


தற்போது இந்த பூனை 120 செ.மீட்டர் நீளம் உள்ளது. இதற்கு முன்னர் 118 செ.மீட்டர் நீளம் இருந்த பூனையே, உலகின் நீளமான பூனையாக கருதப்பட்டு வந்தது. தற்போது அந்த சாதனையை ஒமர் முறியடிக்க உள்ளது.

இந்த பூனையின் உரிமையாளரான ஸ்டெபி ஹிஸ்டாஸ் என்பவர் ஒமரின் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை துவங்கி, அதில் பூனையின் படத்தை பதிவிட்டார். இத்தனை பெரிய பூனையை பார்த்து ஆச்சரியப்பட்ட நெட்டிசன்கள், ஒமரின் படத்தை ஷேர் செய்து இணையத்தில் பிரபலப்படுத்தியுள்ளனர்.

இணையம் வழியாக ஒமரின் புகைப்படத்தை பார்த்த கின்னஸ் சாதனை அமைப்பு, பூனையின் அளவு குறித்த தகவல்களை அனுப்பி வைக்குமாறு ஸ்டெபியிடம் கேட்டுள்ளது. ஓமரின் நீளம் கின்னஸ் அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உலகின் நீளமான பூனை என்ற பெருமையை ஒமர் பெறும். இதற்கான முடிவு கிடைக்க மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.

தற்போது 14 கி.கி எடையுள்ள அந்த பூனை, கங்காரு மாமிசத்தை விரும்பி உண்ணுகிறதாம்.
World's longest cat is in Australia

அடுத்த செய்தி