ஆப்நகரம்

எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளம் முடக்கம்? கமலுக்கு ஆதரவாக எழுதியதன் எதிரொலியா?

எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலுக்கு ஆதரவாக எழுதியதன் எதிரொலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

TNN 29 Mar 2017, 1:32 am
எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலுக்கு ஆதரவாக எழுதியதன் எதிரொலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Samayam Tamil writer jeyamohan website hacked
எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளம் முடக்கம்? கமலுக்கு ஆதரவாக எழுதியதன் எதிரொலியா?


நடிகர் கமல்ஹாசன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது மகாபாரதத்தைப் பற்றி இழிவாகப் பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாபாரதம் பெண்களை வைத்து சூதாடுவதை சொல்லித்தருவதாக அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மார்ச் 26ஆம் தேதி, பெங்களூரைச் சேர்ந்த பசவேஸ்வரா மடத்தின் பிரணவானந்தாவும் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து, அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக எழுத்தாளர் ஜெயமோகன் 'இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் பிரணவானந்தா போன்றோர் இந்துமதத்திற்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்க மதவிரோத தடுப்புச்சட்டத்தை இயற்ற வழிகோலுவதாக குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவரது இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இணையதளத்தில் இருந்து 'இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?' உள்ளிட்ட கட்டுரைகள் நீக்கப்பட்டன. மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகான எந்த பதிவுமே இணையதளத்தில் இல்லை.

மேலும் போலியான முகப்புப் பக்கம் ஒன்று மட்டும் உள்ளது. அதில் காட்டப்படும் எந்த பதிவையும் க்ளிக் செய்து படிக்க முடியவில்லை.

தனது இணையதளம் முடக்கப்பட்டதா என்பது பற்றி எந்த கருத்தும் எழுத்தாளர் ஜெயமோகன் தரப்பிலிருந்து உடனடியாக கிடைக்கவில்லை. இருப்பினும், கமலுக்கு ஆதரவாக அவர் எழுதியதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுப்பப்படுகிறது.

அடுத்த செய்தி