ஆப்நகரம்

இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞர்- வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேச மாநில ஜிம் ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

TNN 19 Aug 2017, 3:56 pm
மத்திய பிரதேச மாநில ஜிம் ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Samayam Tamil younger boy attacked a girl on madhya pradesh video goes viral
இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞர்- வைரலாகும் வீடியோ


வடமாநிலங்களில் பெண்கள் அதிகமாக தாக்கப்படுவதையும், மனித உரிமை மீறல்களுக்கு உட்படுவதையும் அடிக்கடி வெளியாகும் வீடியோக்கள் நிருபித்து வருகின்றன.

இதில் தற்போது மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஜிம் ஒன்றில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணைத் தாக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆண், பெண் என இருபாலரும் உடற்பயிற்சி செய்யும் இந்த ஜிம்மில் உடற்பயிற்சி முடித்தப் பிறகு இளைஞர்கள் உரையாடுவது வழக்கம். அப்படி உரையாடிக் கொண்டிருந்த போது, இளைஞர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று அங்கிருந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமான இளைஞைர் ஒருவர் அந்த பெண் கூறியதை நிருபிக்கும் விதமாக பயங்கரமாக அந்த பெண்ணை அடித்தும், மிதித்தும் தாக்கியுள்ளார். அங்கிருந்த cctv கேமிராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Younger boy attacked a girl on Madhya Pradesh- video goes viral

அடுத்த செய்தி