ஆப்நகரம்

ஜிக்கா வைரசால் மைக்ரோசெஃபலி ஏற்படாது; ஆய்வில் தகவல்

ஜிக்கா வைரஸ் கிருமி தாக்குவதால், மைக்ராசெஃபலி ஏற்பட வாய்ப்பில்லை என்று, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

TNN 26 Jun 2016, 7:13 pm
ஜிக்கா வைரஸ் கிருமி தாக்குவதால், மைக்ராசெஃபலி ஏற்பட வாய்ப்பில்லை என்று, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil zika virus may not cause microcephaly study
ஜிக்கா வைரசால் மைக்ரோசெஃபலி ஏற்படாது; ஆய்வில் தகவல்


சில மாதங்களுக்கு முன்பாக, தென்அமெரிக்க நாடுகள் பலவற்றில் ஜிக்கா வைரஸ் தொற்று காரணமாக, பலர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கர்ப்பமான பெண்கள் அதிகளவில் பாதிப்புக்கு ஆளாகினர். இந்த வைரஸ் காரணமாக, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள், தலை சிறுத்த நிலையில் காணப்பட்டனர். இதற்கு மைக்ரோசெஃபலி எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்த பாதிப்பு ஏற்பட ஜிக்கா வைரஸ்தான் காரணம் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜிக்கா வைரஸ் தொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஒன்று, தீவிர ஆய்வு மேற்கொண்டது. அதன்முடிவில், கருவுற்ற பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் தலை சிறுத்துக் காணப்பட வேறு சில காரணங்கள் உள்ளதாக, தெரியவந்துள்ளது.

ஜிக்கா வைரஸ் பாதித்த எல்லாருக்குமே இந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும், 10 ஆயிரம் பேரில் 2 பேர் என்ற விகிதத்தில் ஜிக்கா வைரஸின் தாக்கம் மிகக் குறைவாக உள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி