ஆப்நகரம்

ஆற்றில் பிடித்துதள்ளிய மோடி!: பாஜக ஆட்சியை புதுமையாகப் புகழ்ந்த அமைச்சர்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மூன்று ஆண்டு ஆட்சி தன் வாழ்நாளின் சிறந்த நாட்களாக அமைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.

TOI Contributor 25 May 2017, 10:57 am
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மூன்று ஆண்டு ஆட்சி தன் வாழ்நாளின் சிறந்த நாட்களாக அமைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.
Samayam Tamil 3 years at centre were best days of my life says uma bharati
ஆற்றில் பிடித்துதள்ளிய மோடி!: பாஜக ஆட்சியை புதுமையாகப் புகழ்ந்த அமைச்சர்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி தொடங்கியது. அதிலிருந்து மத்தியில் பாஜக ஆட்சியின் மூன்றாண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் மூன்றாண்டு ஆட்சி குறித்து பேசியுள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, “பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 99 திட்டங்களும் மூன்று ஆண்டுகளில் நிறைவைடையும். 70.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிற்கு நீர்பாச வசதி அமைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, “கென்-பெத்வா திட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படவுள்ளது. 77 மீட்டர் உயரமும் 2031 மீட்டர் அகலமும் கொண்ட அணைக்கட்டு மற்றும் 221 கிலோ மீட்டர் தொலைவு பாசன வசதி ஆகியவை இத்திட்டத்தின் வாயிலாக கிடைக்கவுள்ளன.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சிறுவயது முதலே எனக்கு தண்ணீர் மீது அதிக ஈடுபாடு உண்டு. நீர்வளத்துறை அமைச்சராக கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகளில் பங்கெடுக்கும் போது ஆற்று நீரில் திளைக்கும் மீன் போல உணருகிறேன். என் வாழ்நாளின் மகிழ்ச்சியான நாட்களாக மத்திய அரசின் மூன்றாண்டு ஆட்சி அமைந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி