ஆப்நகரம்

‘3 ஆண்டுகளில் சாதித்தது என்ன?’ மத்திய அமைச்சர்கள் அறிக்கை அளிக்க மோடி அரசு உத்தரவு

3 ஆண்டு பதவி காலத்தில் சாதித்தது என்ன என்பது குறித்து மத்திய அமைச்சர்களிடம் நரேந்திர மோடி அரசு அறிக்கை கேட்டுள்ளது.

TNN 17 May 2017, 5:23 pm
3 ஆண்டு பதவி காலத்தில் சாதித்தது என்ன என்பது குறித்து மத்திய அமைச்சர்களிடம் நரேந்திர மோடி அரசு அறிக்கை கேட்டுள்ளது.
Samayam Tamil central ministers sent to the report what achieved in the last 3year
‘3 ஆண்டுகளில் சாதித்தது என்ன?’ மத்திய அமைச்சர்கள் அறிக்கை அளிக்க மோடி அரசு உத்தரவு


மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2014–ம் ஆண்டு, மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. வரும் 26ம் தேதியுடன் அது, தன் 3 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்கிறது.

இந்த 3 ஆண்டு காலத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு செய்த சாதனைகளை பட்டியலிட்டு அறிக்கை அளிக்குமாறு மோடி அரசு கேட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அமைச்சர்கள் 3 பக்க அளவில் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

1. மக்கள் பலன்பெற்ற அல்லது மக்களால் பாராட்டப்பட்ட உங்கள் அமைச்சகத்தின் 5 பெரிய சாதனைகள்.

2. உங்கள் அமைச்சகத்தின் முக்கிய செயல்திறன் காட்டிகள்.

3. 2014–ம் ஆண்டு உங்கள் அமைச்சகம் எப்படி இருந்தது, 2017–ல் எப்படி உள்ளது? என்பது பற்றிய ஒரு ஒப்பீடு. உதாரணமாக பெட்ரோலிய அமைச்சகம் என்றால், 2014–ம் ஆண்டு இருந்த சமையல் கியாஸ் இணைப்புகளின் எண்ணிக்கை, தற்போதைய எண்ணிக்கை விவரம்.

4. செயல்முறை, கொள்கை, செயல்பாடு, திட்டங்கள் போன்றவற்றில் உங்கள் அமைச்சகம் கொண்டு வந்த 3 முக்கிய சீர்திருத்தங்கள்.

5. தலா ஒரு பத்தியில் இரண்டு வெற்றி கதைகள். (செயல்படுத்தி வெற்றி கண்டவை) இவ்வாறு வெங்கையா நாயுடு, அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அம்சங்களின் அடிப்படையில் மத்திய அமைச்சர்கள் அளிக்கக்கூடிய அறிக்கைகளைக் கொண்டு, ஒரு சிறிய புத்தகம் தயாரித்து அதை மே மாதம் 26–ந்தேதிக்கு முன்னதாக புத்தகமாக வெளியிடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்