ஆப்நகரம்

5530 பட்டாசு கடைகளுக்கு அனுமதி: தீயணைப்பு துறை தகவல்

தமிழகம் முழுவதும் சுமார் 5530 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

TNN 26 Oct 2016, 12:09 am
சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 5530 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil approval to 5530 crackers shops in tn fire dep
5530 பட்டாசு கடைகளுக்கு அனுமதி: தீயணைப்பு துறை தகவல்


தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தீவுத்திடல், பட்டாசு கடைகள் போடப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. அதேபோல், தமிழக கூட்டுறவு நிறுவனங்களிலும் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 5530 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

மொத்தம் 5850 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. அதில் 5530 பட்டாசு கடைகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 188 விண்ணப்ப மனுக்களை நிராகரிக்கப்பட்டுள்ளது. 137 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்றும் தீயணைப்பு துறை தெரிவிதுள்ளது.

மேலும், சென்னையில் 1039 கடைகளுக்கு சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.
Approval to 5530 crackers shops in TN: Fire dep

அடுத்த செய்தி