ஆப்நகரம்

ஓட்டுனர்களின் தியாகத்தால் உருவான தீபாவளி!

பொதுமக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட பேருந்து ஓட்டுனர்கள் தங்களது மகிழ்ச்சியை தியாகத்தை செய்து பணியில் ஈடுபட்டு மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காண்கின்றனர்.

TOI Contributor 29 Oct 2016, 10:51 pm
பொதுமக்கள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட பேருந்து ஓட்டுனர்கள் தங்களது மகிழ்ச்சியை தியாகத்தை செய்து பணியில் ஈடுபட்டு மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காண்கின்றனர்.
Samayam Tamil deepavali special respect for drivers
ஓட்டுனர்களின் தியாகத்தால் உருவான தீபாவளி!


வேலைக்காக வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திபாவளி கொண்டாடுவதற்காக செல்வது வழக்கம் இவர்கள் பயணம் செய்யும் பேருந்து, ரயில் ஆகியவற்றின் ஓட்டுனர்களின் கையில் தான் அத்தனை பேரின் ஆசை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு போன்ற அனைத்தையும் வாகனத்தின் ஓட்டுனரிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக பயணம் செய்கின்றனர்.

இது தானே அவர்களின் வேலை என சிலர் கருத வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் ஓரிரு நாட்கள் இரவு பணி என்றாலே விழி பிதுங்குவது வழக்கம். பணி நேரம் முடிந்து சிறிதும் கூடுதலாக அலுவலகத்தில் உழைக்கும் பலர், தனது நிலையை எண்ணி புலம்புவது உண்டு. ஆனால் வெளியூருக்கு செல்லும் பேருந்து ஓட்டுனர்கள் பெரும்பாலும் இரவில் வாகனத்தை ஓட்டுவது வழக்கம். அதேபோல் தீபாவளி, பொங்கல், விடுமுறை நாட்கள் என அடுத்தடுத்து வேலை தங்களது விடுகளில் தீபாவளி கொண்டாடுவதை தவிர்த்து, தன் பேருந்தில் பயணம் செய்யும் அனைவரின் உயிரையும் தன் உயிராக பாவித்து அனைவரையும் பத்திரமாக கொண்டு சென்று விடுவது தான் ஓட்டுனரின் தியாகமாக உள்ளது.

நாம் அலுவலகத்திலிருந்து வீடுகளுக்கு சிறிது தூரம் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது, வழியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நமது மூளை மிகவும் சோர்வடைய செய்துவிடும். வீட்டுக்கு சென்றதும் எப்படா ரெஸ்ட் கிடைக்கும் என தோன்றுவது வழக்கம். ஆனால் இதனையே பணியாக கொண்டவருக்கு ஏற்படும் மன அழுத்தம், உடற்பிரச்னை குறித்து நாம் கவலைப்படுவதில்லை.

அடுத்த செய்தி